|
| நாராயணன் ராஜினாமாவை ஏற்கவும்: திருமா.கோரிக்கை |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 15:25 IST ) | |
மும்பை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்று, பதவி விலக முன்வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனின் ராஜினாவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மும்பையில் பயங்கரவாத சம்பவம் எதிரொலியாக மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சிவராஜ் பாட்டீல் பதவி விலகி உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் பதவி விலக முன் வந்தும் அதை மத்திய அரசு ஏற்க மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
உள்துறை அமைச்சரைக் காட்டிலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் நேரடி பங்களிப்பு மிக இன்றியமையாத ஒன்றாகும். இத்தகைய தாக்குதலுக்கு அவரே பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் அவரை நீடிக்க அனுமதித்து விட்டு உள்துறை அமைச்சரை விடுவித்திருப்பது அரசியல் நாடகமாகத்தான் கருத நேரிடும். எனவே அவரது பதவி விலகலையும் அரசு ஏற்க வேண்டும்.
அதோடு, தற்போதைய சூழலில் புதிய புலனாய்வு அமைப்பு தேவையற்றது என்பதையும் மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|