யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
வேளாண்துறை கே.என். நேருவிடம் ஒப்படைப்பு
சென்னை (ஏஜென்சி), 1 டிசம்பர் 2008   ( 15:12 IST )
வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அடுத்து அவரது இலாகா, அமைச்சர் கே.என். நேருவிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆம் தேதி தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த அவரது உடல்நிலை தற்போது முன்னேறி வருகிறது.அவ்வப்போது முதல்வர் கருணாநிதி வீரபாண்டி ஆறுமுகத்தை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்து வந்தார்.

இந்நிலையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வகித்து வந்த வேளாண் துறை, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேருவிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கருணாநிதியின் மாயவலை: ஜெ. தாக்கு
ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு தீவிரம்
நாராயணன் ராஜினாமாவை ஏற்கவும்: திருமா.கோரிக்கை
வெள்ள நிவாரண‌ம்: ஸ்டாலின் தலைமையில் குழு
டெல்லி செல்லும் குழுவில் மதிமுக இடம்பெறாது: வைகோ
மும்பையில் பலியான வீரர்களுக்கு நடிகர் சங்கம் அஞ்சலி
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...