|
| டெல்லி செல்லும் குழுவில் மதிமுக இடம்பெறாது: வைகோ |
| சென்னை (ஏஜென்சி), 1 டிசம்பர் 2008 ( 13:51 IST ) | |
இலங்கை விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்கும் தமிழக அனைத்துக் கட்சிக் குழுவில் மதிமுக பங்கு பெறாது என்று அதன் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தனது லண்டன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பிய வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தலைமையில் டிசம்பர் 4 ஆம் தேதி டெல்லி செல்லும் அனைத்துக் கட்சிக் குழுவின் நடவடிக்கையானது வெறும் கண்துடைப்பு என்று குறிப்பிட்ட வைகோ, இந்த விவகாரத்தில் கருணாநிதி நாடகமாடுவதாகக் குற்றம்சாட்டினார்.
இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பது தொடர்பாக தனது கட்சிப் பிரதிநிதிகள் ஏற்கனவே பிரதமர் மன்மோகன்சிங்கை டெல்லியில் சந்தித்து முறையிட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்ததாகவும், ஆனால் எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் வைகோ தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|