|
| மும்பையில் பலியான வீரர்களுக்கு நடிகர் சங்கம் அஞ்சலி |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 11:41 IST ) | |
மும்பை தாக்குதலின் போது பலியான பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நாளை மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்வது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம், அதன் துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மும்பையில் நடந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தங்கள் உயிரை துச்சமாக மதித்து பலரது உயிரைக் காப்பாற்றிய பாதுகாப்பு வீரர்களின் தியாகத்தை உறுப்பினர்கள் புகழ்ந்தனர்.
மேலும், மும்பை தாக்குதலில் பலியான பாதுகாப்பு படை வீரர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை மலரஞ்சலி செலுத்துவது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரின் ஒப்புதலுடன் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக பொதுச் செயலாளர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|