யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திருவாரூர், கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
கடலூர்/ தஞ்சை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2008   ( 15:39 IST )
மழையின் பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக விடுபடாத திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிஷா புயால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தமிழகம் படிப்படியாக மீண்டு வருகிறது. சென்னை நகரில் 5 நாட்களுக்குப் பின் மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது திரும்பியுள்ளது.

ஆனால், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்னமும் மழை நீர் வடியாமல் உள்ளது. பல இடங்கள் தனித்தனி தீவுகளாகக் காட்சியளிக்கின்றன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து சீரடையவில்லை.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் வரும் 3 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள், அருகில் உள்ள பல்வேறு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அருந்ததியர் ஒதுக்கீடு: ஜெ. புகாருக்கு கருணாநிதி மறுப்பு
காடுவெட்டி குரு விடுதலை ஆனார்
ஓட்டல் அதிபர்கள்-போலீஸ் கமிஷனர் ஆலோசனை
மின்வெட்டு வழக்கை சந்திக்க தயார்: ஜெ.
மழை பாதிப்புக்கு கூடுதல் நிதி: திருமா. வலியுறுத்தல்
கருணாநிதியின் இடஒதுக்கீடு மோசடி: ஜெ. குற்றச்சாட்டு
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...