|
| அருந்ததியர் ஒதுக்கீடு: ஜெ. புகாருக்கு கருணாநிதி மறுப்பு |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2008 ( 15:10 IST ) | |
அருந்ததியர் இடஒதுக்கீடு தொடர்பாக ஜெயலலிதா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முதல்வர் கருணாநிதி, இதற்கு தடை போடாமல் அவர் ஒதுங்கி நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
திமுக அரசு செய்து வரும் சாதனைகளை கடும் சொற்களால் அர்ச்சித்து வருவதை ஜெயலலிதா தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். நல்லவை நடக்கும்போது பாராட்டாவிட்டாலும் கூட பழி சொல்லாமலாவது இருக்க வேண்டும்.
அருந்ததியர் ஒதுக்கீடு தொடர்பாக நான் ஏமாற்றுவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அருந்ததியரை மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களையும் ஜெயலலிதா ஏமாற்றி வருகிறார்.
அரசியல் அமைப்பு சட்டத்தின் 341 (2) பிரிவின் கீழ், குடியரசுத் தலைவர் அறிவிக்கையின்படி 76 ஜாதியினர் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் அடங்குவர். 12.3.2008ல் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நீதிபதி ஜனார்தனன் தலைமையில், அருந்ததியர் இடஒதுக்கீடு தொடர்பாக ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த குழு அளித்த பரிந்துரையின்படி திமுக அரசு செயல்பட முனந்தபோது, அதற்கு முரண்பட்ட கருத்துக்களை ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
வேடிக்கை அரசியல் நடத்துவதை கைவிட்டுவிட்டு, நாட்டு மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வ அரசியல் நடத்த ஜெயலலிதா முன் வர வேண்டும். கடைக்கோடியில் இருக்கும் அருந்ததியர் இன மக்களின் தனி ஒதுக்கீட்டுக்கு தடைக்கற்களைப் போடாமல் ஜெயலலிதா ஒதுங்கி இருக்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் முழு பின்னணியையும், பஞ்சாப் மாநிலத்தில் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் கருணாநிதி தனது கடிதத்தில் பட்டியலிட்டுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|