|
| காடுவெட்டி குரு விடுதலை ஆனார் |
| திருச்சி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2008 ( 13:12 IST ) | |
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். பாமகவினர் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பாமக மூத்த தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க மாநிலத் தலைவருமான காடுவெட்டி ஜெ. குரு, கடந்த ஜூலை 5 ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, குருவை சிறையில் அடைத்தபோது இருந்த நிலைமை தற்போது இல்லை என்று கூறி அவருக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழான கைது நடவடிக்கையை தமிழக அரசு, கடந்த வாரம் விலக்கிக் கொண்டது.
மேலும், குணசேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் குருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதேபோல் மத்திய அமைச்சரை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கிலும் அரியலூர் நீதிமன்றம் குருவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தது.
இந்நிலையில், 147 நாட்கள் சிறை வாசத்துக்குப்பின் காடுவெட்டி குரு இன்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஜாமீன் உத்தரவு தொடர்பான ஆவணங்கள் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின் அவர் விடுதலை ஆனார்.
சிறை வாசலில் பாமக தலைவர் கோ.க. மணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். இதன் பின்னர் தனது சொந்த ஊரான காடுவெட்டிக்கு குரு புறப்பட்டுச் சென்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|