யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஓட்டல் அதிபர்கள்-போலீஸ் கமிஷனர் ஆலோசனை
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 29 நவம்பர் 2008   ( 18:01 IST )
மும்பை நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக சென்னை நட்சத்திர ஓட்டல்களின் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து காவல்துறை சார்பில் ஓட்டல் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓட்டல் அதிபர்கள், நிர்வாகிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சென்னையில் நடைபெறாமல் தடுப்பது, நட்சத்திர ஓட்டல்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தப்படுவது ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்து.

ஓட்டல்களில் கண்காணிப்பு கேமராக்கள், அதிநவீன பாதுகாப்பு கருவிகள் பயன்படுத்துவது குறித்தும், உள்ளேயும், வெளியேயும், முக்கிய இடங்களிலும், வாகன நிறுத்துமிடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதும் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மின்வெட்டு வழக்கை சந்திக்க தயார்: ஜெ.
மழை பாதிப்புக்கு கூடுதல் நிதி: திருமா. வலியுறுத்தல்
கருணாநிதியின் இடஒதுக்கீடு மோசடி: ஜெ. குற்றச்சாட்டு
தொடர்மழை‌: ப‌லி எண்ணிக்கை 115 ஆனது!
படிப்படியாக மழை குறையும்: வானிலை அறிக்கை
சென்னை ரயில்கள் தாமதம்; போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...