|
| மின்வெட்டு வழக்கை சந்திக்க தயார்: ஜெ. |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 29 நவம்பர் 2008 ( 17:23 IST ) | |
மின்வெட்டு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தியதற்காக தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தில் நிலவும் கடும் மின்வெட்டினை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி இதுபோன்ற போராட்டங்களை நடத்துவதன் காரணமாக மக்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மின்வெட்டு குறித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்றும், மின்வாரிய அலுவலகங்கள் முன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கோரி திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒருவரை விட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி வழக்கு தொடுத்துள்ளார்.
இதன் மூலம், நான் வெளியிடும் அறிக்கைகள் எந்த அளவுக்கு திமுகவை நிலைகுலைய வைத்துள்ளது என்பது தெளிவாகி உள்ளது.
மின்வெட்டு பிரச்சனை தமிழகத்தில் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. ஆனால், 'முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்' எனக்கு வாய்ப்பூட்டு போட்டு விட்டால் மின்வெட்டு பிரச்சனையை மூடி மறைத்து விடலாம் என அவர் நினைப்பது தெளிவாகி உள்ளது.
மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி போராட்டங்களை நடத்தியதற்காக என் மீது தொடரப்பட்டிருக்கும் வழக்கை சட்டரீதியாக, தைரியமாக சந்திக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|