யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மழை பாதிப்புக்கு கூடுதல் நிதி: திருமா. வலியுறுத்தல்
சென்னை (ஏஜென்சி), 29 நவம்பர் 2008   ( 17:15 IST )
'மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு கூடுதலாக நிதியுதவி வழங்க வேண்டும்' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக, கடலோர மாவட்டங்கள் மிகக் கடுமையாகவும், இதர மாவட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உணவு, உடையின்றி இன்னலுக்கு ஆளாகிவரும் சூழலில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் ஆறுதல் அளிக்கின்றன.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 20 கிலோ அரிசி, உணவுப் பொருட்கள் மற்றும் உடைகள் வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும்.

அத்துடன் நிலைமைக்கேற்றபடி மண்ணெண்ணெய் அடுப்பு, பாத்திரங்கள், போர்வை போன்ற இன்றியமையாதத் தேவைகளுடன் உரிய மருத்துவ உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.3 ஆயிரமும், கடுமையான பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரமும் கால்நடைகள் இறப்பு, பயிர்களின் பாதிப்புக்கு ஏற்ற வகையில் உரிய நிவாரண உதவியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கிட வேண்டும்.

அடைமழை காரணமாக டிசம்பர் 1ம் தேதி சென்னையில் நடைபெறவிருந்த இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் தொடக்க விழா மற்றும் தமிழீழ அங்கீகார மாநாடு டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கருணாநிதியின் இடஒதுக்கீடு மோசடி: ஜெ. குற்றச்சாட்டு
தொடர்மழை‌: ப‌லி எண்ணிக்கை 115 ஆனது!
படிப்படியாக மழை குறையும்: வானிலை அறிக்கை
சென்னை ரயில்கள் தாமதம்; போக்குவரத்து பாதிப்பு!
மழை, வெள்ளம் நீடிக்கிறது; தத்தளிக்கும் சென்னை மக்கள்!
பிரபாகரன் பிறந்தநாள்: திருமாவளவன் விளக்கம்
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...