யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கருணாநிதியின் இடஒதுக்கீடு மோசடி: ஜெ. குற்றச்சாட்டு
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 29 நவம்பர் 2008   ( 16:49 IST )
'அருந்ததியருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு தரப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்து இருப்பது அரசியல் மோசடி' என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

௦இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தை சீரழித்த திமுக அரசுக்கு, வரும் மக்களவைத் தேர்தலில் தக்க பாடம் கற்பிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். இதை உணர்ந்த கருணாநிதி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 3 சதவீதம் அருந்ததியருக்கு ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அருந்ததிய மக்களை ஏமாற்றும் அவரது முயற்சி ஓர் அரசியல் மோசடி. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசிற்கு அதிகாரம் கிடையாது.

ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தைப் பொறுத்த வரையில், அதன் கவர்னர் அல்லது துணை நிலை கவர்னரைக் கலந்து ஆலோசித்த பின்னரே அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் என்று கருதப்பட வேண்டிய சாதிகள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகள் அல்லது கிளைகள் ஆகியவற்றை பட்டியலிட்டு ஒரு பொது அறிவிக்கையின் மூலம், குடியரசுத் தலைவர் வெளியிடவேண்டும்’ என்று இந்திய அரசியலைப்புச் சட்டம் பிரிவு 341-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசியலைப்புச் சட்டம் பிரிவு 341-ன் கீழ், குடியரசுத் தலைவரால் அறிவிக்கை செய்யப்பட்ட பட்டியலை மாற்றுவதற்கான அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்திற்கு தான் உண்டே தவிர, மாநில அரசுக்கு கிடையாது.

உண்மையிலேயே கருணாநிதிக்கு அருந்ததிய இன மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், ஆட்சிக்கு வந்தவுடனேயே இதை செய்திருக்க வேண்டும். திமுக அரசின் நாட்கள் எண்ணப்படும் சூழ்நிலையில், கருணாநிதியின் இந்த அறிவிப்பு ஒரு ஏமாற்று நடவடிக்கையே.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன், அருந்ததிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றவும், ஆதிதிராவிடர், தேவேந்திர குல வேளாளர் உட்பட அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களின் குறைகளை போக்கவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தொடர்மழை‌: ப‌லி எண்ணிக்கை 115 ஆனது!
படிப்படியாக மழை குறையும்: வானிலை அறிக்கை
சென்னை ரயில்கள் தாமதம்; போக்குவரத்து பாதிப்பு!
மழை, வெள்ளம் நீடிக்கிறது; தத்தளிக்கும் சென்னை மக்கள்!
பிரபாகரன் பிறந்தநாள்: திருமாவளவன் விளக்கம்
வெள்ள நிவாரணத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...