|
| தொடர்மழை: பலி எண்ணிக்கை 115 ஆனது! |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 29 நவம்பர் 2008 ( 13:28 IST ) | |
தமிழகத்தில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த நிஷா புயல் காரணமாக, கடந்த 5 தினங்களாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், மின்சாரம் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 5 தினங்களாக வெள்ளத்தில் மிதக்கும் சென்னை நகரிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சென்னை, புறநகர் பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.
கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரை, குன்றத்தூர், பூந்தமல்லி, வடபழனி, துரைபாக்கம், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் பலர் பலியாகியுள்ளனர்.
கடற்கரையோர மாவட்டங்களிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதன்மூலம், தமிழகத்தில் இதுவரை மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|