யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
படிப்படியாக மழை குறையும்: வானிலை அறிக்கை
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 29 நவம்பர் 2008   ( 10:11 IST )
கடந்த 5 தினங்களாக சென்னை மக்களை முடக்கி வைத்த மழை, இனி படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிஷா புயல் மையம் கொண்டதன் காரணமாக, கடந்த 5 தினங்களாக தமிழகம் முழுவதும் மழை கொட்டியது. நிஷா கரை கடந்த பின்னரும் மழை ஓயவில்லை.

இதனால் கடந்த 5 தினங்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியது. இதனால், மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சென்னையிலும் கடந்த 5 தினங்களாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சுரங்கப் பாதைகளும் நிரம்பி வழிந்தன. இதனால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இந்த பேய் மழை நேற்றிரவு தொடங்கி, இன்று காலை வரை நீடித்தது.

இந்நிலையில், இன்றிலிருந்து மழை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிஷாவின் கோர தாண்டவம் காரணமாக, கடந்த சில தினங்களாக பதுங்கியிருந்த சூரியன் இன்று காலையிலிருந்து தலைகாட்ட தொடங்கியது. இதனால், மக்களும் வெளியே தலைகாட்ட தொடங்கியுள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை ரயில்கள் தாமதம்; போக்குவரத்து பாதிப்பு!
மழை, வெள்ளம் நீடிக்கிறது; தத்தளிக்கும் சென்னை மக்கள்!
பிரபாகரன் பிறந்தநாள்: திருமாவளவன் விளக்கம்
வெள்ள நிவாரணத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
மழை பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு
தமிழக எம்பி-க்கள் பிரதமரை சந்திப்பதில் மாற்றம்
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...