|
| மதுக் கடைகளை மூடாவிட்டால் போராட்டம்: ராமதாஸ் |
| சென்னை (ஏஜென்சி) , சனிக்கிழமை, 22 நவம்பர் 2008 ( 17:55 IST ) | |
தமிழகத்தில் வரும் ஜனவரிக்குள் மதுக் கடைகளை மூடாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக எச்சரித்துள்ளது.
மது ஒழிப்பு குறித்துச் சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விபரம்:
அரசே மதுபானக் கடைகளை நடத்துவதால் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
மதுக்கடைகளால், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மட்டுமின்றி, பெண்களும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் அவலநிலை உருவாகி உள்ளது. எனவே பூரண மது விலக்கு கொள்கையை அரசு அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் வரும் ஜனவரி மாதத்திற்குள் அரசு மூடவேண்டும். இல்லையெனில், பல்வேறு அமைப்புகளும் ஒன்றிணைந்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|