|
| நாகர்கோவில்: நவ.24 ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெ |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008 ( 14:11 IST ) | |
நெய்யாறு அணையை உடனடியாகத் திறந்துவிடும்படி கேரள அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் வரும் 24ஆம் தேதி நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகாவிலுள்ள பல பல கிராம மக்கள் நெய்யாறு இடதுகரை கால்வாய் தண்ணீரை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் விவசாயத்தையே முக்கியத் தொழிலாகச் செய்து வருகின்றனர்.
நெய்யாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு கேரள அரசு தண்ணீர் திறந்து விடாததால் இப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தமிழக மக்களுக்கு நியாயமாக தரவேண்டிய தண்ணீருக்கு கேரள அரசு காசுகேட்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது. இதுபோன்ற ஒரு கடிதத்தை கேரள அமைச்சர் எழுதி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கேரள அரசு கடிதம் எழுதியது தொடர்பாக திமுக அரசு என்ன சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்தது என்பதை முதல்வர் கருணாநிதி விளக்க வேண்டும்.
நெய்யாறு இடதுகரை கால்வாய் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தியும், நெய்யாறு அணையை கேரள அரசு உடனடியாகத் திறந்துவிட வலியுறுத்தியும், கன்னியாகுமரி மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில் வரும் 24ம் தேதி நாகர்கோவில் வடசேரி உதவி செயற்பொறியாளர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|