யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
புயல் சின்னம்: 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்
சென்னை (ஏஜென்சி), 22 நவம்பர் 2008   ( 14:05 IST )
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம் அடைந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது.

தமிழ்நாடு, தெற்கு ஆந்திராவுக்கு இடையே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.

இது மேலும் தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக நேற்றிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. மதுரை, தேனி, திண்டுகல், ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர் உட்பட பெரும்பாலான இடங்களில் மழை பெய்து, வெள்ளக் காடாகக் காட்சியளிக்கிறது.

தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் பெரியாறு, வைகை அணையின் நீர் மட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் விடிய விடிய கன மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

ராமேஸ்வரம், பாம்பன் ஆகிய இடங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் 3-வது நாளாக இன்றும் மழை கொட்டியது. இதனால் சம்பா, தாளடி நெற்பயிற்கள், வாழை போன்றவை வெள்ளத்தில் மூழ்கின.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கை பிரச்னையை திசை திருப்ப கருணாநிதி முயற்சி: சு.சாமி
ஜெகதாப்பட்டிணம் மீனவர் ஸ்டிரைக் வாபஸ்
மாற்று அணி உறுதி : தா.பாண்டியன்!
ஜெ.ஆ‌ட்‌சி‌யி‌ல் ஜனநாயக‌ம்: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌‌டு‌க்கு முதல்வர் கே‌ள்‌வி!
அமீர், சீமான் ஜாமீனை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னையில் விடிய விடிய மழை!
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...