யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இலங்கை பிரச்னையை திசை திருப்ப கருணாநிதி முயற்சி: சு.சாமி
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008   ( 13:58 IST )
இலங்கை பிரச்சனை மற்றும் சட்டக் கல்லூரி பிரச்சனைகளை திசை திருப்பவே முதல்வர் கருணாநிதி குடும்பப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

சமீபகாலமாக முதல்வர் கருணாநிதி பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சமாளிப்பதில் அரசு தோல்வி அடைந்து விட்டது.

இலங்கை பிரச்சனையிலும் திமுக மற்றும் தமிழக அரசின் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்து விட்டது. மத்திய அரசின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டிலும் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் மறைப்பதற்காகவும், மக்களை திசை திருப்புவதற்காகவுமே தற்போது குடும்பப் பிரச்சனையை முதல்வர் கருணாநிதி கையில் எடுத்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஸ்வான் மற்றும் இன்டெக் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதனால், மத்திய அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட வேண்டும். இல்லையெனில் இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜெகதாப்பட்டிணம் மீனவர் ஸ்டிரைக் வாபஸ்
மாற்று அணி உறுதி : தா.பாண்டியன்!
ஜெ.ஆ‌ட்‌சி‌யி‌ல் ஜனநாயக‌ம்: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌‌டு‌க்கு முதல்வர் கே‌ள்‌வி!
அமீர், சீமான் ஜாமீனை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னையில் விடிய விடிய மழை!
வீ‌ண்ப‌ழி சும‌த்த வே‌ண்டா‌ம் : கலா‌நி‌தி மாற‌ன் ப‌தி‌ல்!
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...