யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஜெகதாப்பட்டிணம் மீனவர் ஸ்டிரைக் வாபஸ்
புதுக்கோட்டை (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008   ( 11:26 IST )
இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வந்த ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள், தங்கள் போராட்டத்தை இன்று கைவிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா‌ப்ப‌ட்டணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் 22 பேரை துப்பாக்கி முனையில் இலங்கை ராணுவம் சிறை பிடித்துச் சென்றது.

கடத்திச் செல்லப்பட்ட மீனவர்களை பத்திரமாக மீட்க வலியுறுத்தி ஜெகதாப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, இவ்விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார் முதல்வர் கருணாநிதி. இன்னும் ஓரிரு நாட்களில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசுத் தரப்பில் நேற்று உறுதிமொழி அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் தங்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைக் கைவிட்டுள்ளனர். 3 நாட்களுக்குப்பின் தங்களின் வழக்கமான பணிகளை அவர்கள் இன்று தொடங்கினர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாற்று அணி உறுதி : தா.பாண்டியன்!
ஜெ.ஆ‌ட்‌சி‌யி‌ல் ஜனநாயக‌ம்: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌‌டு‌க்கு முதல்வர் கே‌ள்‌வி!
அமீர், சீமான் ஜாமீனை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னையில் விடிய விடிய மழை!
வீ‌ண்ப‌ழி சும‌த்த வே‌ண்டா‌ம் : கலா‌நி‌தி மாற‌ன் ப‌தி‌ல்!
ஜெயேந்திரர் வழக்கு: டிச.18க்கு ஒத்திவைப்பு!
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...