|
| மாற்று அணி உறுதி : தா.பாண்டியன்! |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008 ( 11:11 IST ) | |
காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் மற்றும் அவற்றுடன் உறவு வைத்துள்ள கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் இணைந்து மாற்று அணி அமைப்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நேற்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.
பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடனோ, அந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுடனோ உறவு வைத்துக்கொள்ள மாட்டோம். இக்கட்சிகளுடன் சேராத மற்ற கட்சிகளுடன் இணைந்து மாற்று அணி அமைப்போம்.
மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|