|
| ஜெ.ஆட்சியில் ஜனநாயகம்: மார்க்சிஸ்டுக்கு முதல்வர் கேள்வி! |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008 ( 11:10 IST ) | |
"ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் ஒரே நாளில் 23 மசோதாக்கள் நிறைவேறியபோது, ஜனநாயகம் பாழ்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லையா?" என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
நடைபெற்று முடிந்த சட்டசபை கூட்டத்தொடரை 4 நாட்களில் சுருக்கி விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் அறிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை 6 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதற்கேற்ப பட்ஜெட் கூட்டத்தொடர் மே திங்களில் பொதுவாக முடிந்தால், அதற்கு அடுத்து 6 மாதங்களுக்குள் ஒருமுறை சட்டசபை கூட்டப்பட வேண்டும். அந்த முறையில்தான் நவம்பர் திங்களில் சட்டசபை கூட்டப்பட்டது.
அதில், நிறைவேற்றப்பட வேண்டியவை என்ற வகையில் ஒரு சில அவசர சட்டங்களும், ஒரு சில மசோதாக்களும்தான் இருந்தன. எனவே 4 நாட்கள் அவையை நடத்தினால் போதும் என்ற நிலையே அதிகமாகத் தோன்றியது.
கடந்த 10ஆம் தேதி அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றபோது தோழமைக் கட்சியினரும், எதிர்க் கட்சியினரும் சட்டசபையை நான்கு நாட்கள் என்பதற்குப் பதிலாக ஐந்து நாட்கள் நடத்த வேண்டுமென்று விரும்பினர். அதன்படியே ஐந்து நாட்கள் பேரவை நடைபெற்றது.
இதன் மூலம், சட்டசபை நீட்டப்பட்டதே தவிர, சுருக்கப்படவில்லை. அதோடு, மசோதாக்கள் விவாதிக்கப்பட்ட நேரத்தில் அவையை மேலும் ஒரு நாள் நீடிப்பு செய்ய வேண்டுமென்று எந்தக் கட்சியின் சார்பிலும் கோரப்படவும் இல்லை.
கடந்த ஆட்சிக் காலத்தில் சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெற்றது. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எவ்வளவு பேர் பேச அனுமதிக்கப்பட்டார்கள், ஜனநாயகம் எந்த அளவிற்குப் போற்றிப் பாதுகாக்கப்பட்டது என அனைத்து மார்க்சிஸ்ட் கட்சியினர் அறிவர். ஏதோ, குறைகூற வேண்டும் என்பதற்காக இப்படி குறை சொல்லக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|