|
| அமீர், சீமான் ஜாமீனை எதிர்த்த மனு தள்ளுபடி
|
| மதுரை (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008 ( 10:31 IST ) | |
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட மனுவை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழ் திரையுலகினர் சார்பில் போராட்டம், பொதுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும் பேசிய்தாகக் கூறி இயக்குனர்கள் அமீர், சீமான் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் இருவருக்கும் ராமநாதபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையெதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வக்கீல் முத்துப்பாண்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.
இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி கே.என்.பாஷா, 'ஜாமீன் மனுவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு தகுதியில்லை. மேலும் இவ்வழக்கை விசாரணை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அங்கு குற்றம் சாட்டப்பட்டோர் இவ்வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.
இயக்குனர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கியதில் தவறு இல்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்ய்ப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக இருவரும் பேட்டி அளிக்கவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ கூடாது' என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|