யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
வீ‌ண்ப‌ழி சும‌த்த வே‌ண்டா‌ம் : கலா‌நி‌தி மாற‌ன் ப‌தி‌ல்!
சென்னை (ஏஜென்சி), 22 நவம்பர் 2008   ( 09:14 IST )
எங்கள் மீது வீண் பழி சுமத்த வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதிக்கு சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பதிலளித்துள்ளார்.

திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயா‌‌நி‌தி மாற‌ன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்வர் கருணாநிதியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலான கலாநிதி மாறனின் கடிதத்தை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு அவரது அடியொற்றி திமுகவுக்கும், நம் குடும்பத்துக்கும் விசுவாசிகளாக நடந்து வந்துள்ளோம்.

இரு குடும்பங்களுக்கும் சேர வேண்டிய தொகையை நான் எவ்வளவோ சொல்லியும் நீங்கள்தான் பங்கீடு செய்யச் சொன்னீர்கள். தங்கள் குடும்பத்துக்கான பங்கினை அதிகப்படுத்தி கேட்டபோது எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பதில் அளித்தோம்.

கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் அனைத்துப் பத்திரிகைகளும் திமுகவுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டன. அதனால் உங்களது கட்டளையை ஏற்று, நஷ்டம் ஏற்படும் என்ற நிலையிலும் 'தினகரன்' நாளிதழை வாங்கி நடத்தினோம்.

சிறப்பாக பணியாற்றும் மத்திய அமைச்சர் என்று தயாநிதி மாறனை 'தினகரன்' மட்டுமல்ல பல்வேறு பத்திரிகைகளும் கருத்துக் கணிப்பு வெளியிட்டன. அதனைத் தமிழாக்கம் செய்து 'முரசொலி'யில் முதல் பக்கத்தில் நீங்கள் வெளியிடச் செய்தீர்கள்.

அப்போது, இதனால் கூட்டணிக்குள் பிளவு ஏற்படும் என்று தங்களுக்கு தோன்றவில்லை. ஆனால் அதுபோன்ற கருத்துக் கணிப்பை "தினகரன்' வெளியிட்டபோது அதற்கு சாயங்கள் பூசப்பட்டு எங்கள் மீது வீண்பழி சுமத்தப்பட்டது.

திமுகவுக்காக பல ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் சுற்றி பணியாற்றி 'மிசா' கொடுமையை ஏற்ற ஒருவருக்குத்தானே (மு.க. ஸ்டாலின்) அதிக மதிப்பெண் கிடைத்துள்ளது. ஆனால் அதனைப் பெரிய பாதகச் செயலாக ஏன் எடுத்துக் கொண்டீர்கள் ?

'தினகரன்' வெளியிட்ட கருத்துக் கணிப்புக்காக தயாநிதி மாறனுக்கு தண்டனை வழங்கப்பட்து எந்த விதத்தில் நியாயம்? வேறு யாரையாவது தயாநிதியின் இடத்துக்குக் கொண்டு வரும் எண்ணமிருந்தால் தானாகவே அவர் ராஜினாமா செய்திருப்பார்.

அண்ணா அறிவாலயத்திலிருந்து 'சன் டிவி'யை காலி செய்தபோது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உள் அலங்காரத்தை அப்படியே விட்டுவிட்டுதான் வந்தோம். 'கலைஞர் டிவி'க்காக மாற்றம் செய்து இடிக்கப்பட்ட புகைப்படங்களைத் தங்களிடம் காட்டி எங்கள் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது.

இதன் உள்நோக்கம் தயாநிதி மாறனை கட்சியை விட்டு நீக்குவதாக இருந்தால், அதற்காக எங்கள் மீது அவதூறு பிரச்சாரம் செய்ய தேவையில்லை. கலாநிதிமாறனே ராஜினாமா செய்துவிடுவார்.

தாங்கள் விரும்பினால் இந்த விளக்கத்தை எங்கு வேண்டுமானாலும் சொல்ல தயாராக இருக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னையில் விடிய விடிய மழை!
ஜெயேந்திரர் வழக்கு: டிச.18க்கு ஒத்திவைப்பு!
கருணாநிதி ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுரை
சட்டக் கல்லூரி மோதல்: 26 மாணவர்கள் சஸ்பெண்ட்
விருப்ப ஓய்வு: பிஎஸ்பியில் சேருகிறார் சிவகாமி ஐஏஎஸ்!
மீனவர் பிரச்னை: கருணாநிதியிடம் மத்திய அரசு உறுதி
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...