|
| ஜெயேந்திரர் வழக்கு: டிச.18க்கு ஒத்திவைப்பு! |
| புதுச்சேரி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008 ( 16:18 IST ) | |
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீதான கொலை வழக்கு அடுத்தமாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பரில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கோயில் வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளைய சங்கராச்சாரியார் விஜேந்திரர் உள்பட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு புதுவை நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 12 பேர் ஆஜராகினர். ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் உட்பட 12 பேர் ஆஜராகவில்லை.
அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வேண்டுகோளை ஏற்று வழக்கு விசாரணை டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|