|
| சட்டக் கல்லூரி மோதல்: 26 மாணவர்கள் சஸ்பெண்ட் |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008 ( 13:22 IST ) | |
சென்னை அரசு சட்டக் கல்லூரி மோதல் சம்பவம் தொடர்பாக 26 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 12ம் தேதி சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களின் இரு பிரிவினர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் கண் முன்னிலையில் நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 28 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் எதிரொலியாக கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். புதிய முதல்வராக முகமது இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டக் கல்லூரியின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற இக்பால், கல்லூரியில் நடக்கும் அரசியல், ஜாதி மோதல் குறித்து ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
இதன் அடிப்படையில், இந்த மோதலுக்கு காரணமாக இருந்த 26 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மோதலில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாதுரை மற்றும் சித்திரைச் செல்வன் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் கல்லூரி அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|