யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
விருப்ப ஓய்வு: பிஎஸ்பியில் சேருகிறார் சிவகாமி ஐஏஎஸ்!
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008   ( 13:10 IST )
எழுத்தாளரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சிவகாமி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அவர் வரும் 25 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியில் சேருகிறார்.

தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை ஆணையராக இருந்தவர் பி.சிவகாமி (வயது 52). தலித் வகுப்பைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், மிகவும் நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர்.

கடந்த 29 ஆண்டுகளாக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ள இவர் சிறந்த எழுத்தாளரும் கூட. தலித் இலக்கியத்தில் முக்கிய பங்காற்றி வரும் இவர் ஏராளமான கதை, கட்டுரை மற்றும் நூல்களையும் எழுதியுள்ளார்.

சமீபத்தில், விருப்ப ஓய்வு கேட்டு அரசிடம் மனு செய்திருந்தார் சிவகாமி. அந்த மனுவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி, வரும் 23ம் தேதி பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசு அறிவித்தது.

பணியிலிருந்து ஓய்வு பெறும் சிவகாமி, வரும் 25ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மீனவர் பிரச்னை: கருணாநிதியிடம் மத்திய அரசு உறுதி
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
போரை ‌நிறு‌த்து‌ம்வரை போராடுவோம்: பழ.நெடுமாற‌ன்
ஒகேனக்கலில் கன்னடர்கள் போராட்டம்: போலீஸ் குவிப்பு
மாறன் சகோதரர்கள் மீது கருணாநிதி தாக்கு
திருமா மீது தே.பா. சட்டம்: இளங்கோவன் கோரிக்கை
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...