யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மீனவர் பிரச்னை: கருணாநிதியிடம் மத்திய அரசு உறுதி
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008   ( 13:10 IST )
இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க இந்தியத் தூதர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, முதல்வர் கருணாநிதியிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை ராணுவம் சிறைபிடித்துச் சென்றது.

அவர்களை மீட்பதற்காக மத்திய உள்துறை இணையமைச்சர் அகமதுவை முதல்வர் கருணாநிதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். கடத்தப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி அப்போது கருணாநிதி வலியுறுத்தி இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர் அகமது, முதல்வர் கருணாநிதியை இன்று காலை தொடர்பு கொண்டு பேசினார்.

இலங்கை கடல் எல்லையில் ஒரு கி.மீ. வரை சென்று தமிழக மீனவர்கள் மீன் பிடித்ததாக, இலங்கை அளித்த விளக்கத்தை அப்போது கருணாநிதியிடம் அவர் தெரிவித்தார்.

மேலும் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க, இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அகமது, கருணாநிதியிடம் கூறினார்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
போரை ‌நிறு‌த்து‌ம்வரை போராடுவோம்: பழ.நெடுமாற‌ன்
ஒகேனக்கலில் கன்னடர்கள் போராட்டம்: போலீஸ் குவிப்பு
மாறன் சகோதரர்கள் மீது கருணாநிதி தாக்கு
திருமா மீது தே.பா. சட்டம்: இளங்கோவன் கோரிக்கை
குமரி மாவட்டத்தில் கடல் உள்வாங்கியது
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...