|
| நம்பியார் உடல் இன்று தகனம் |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008 ( 10:24 IST ) | |
சென்னையில் நேற்று காலமான நடிகர் எம்.என். நம்பியாரின் உடல், இன்று மாலை தகனம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் எம்.என். நம்பியார் சென்னையில் நேற்று பிற்பகல் காலமானார். அதன் பிறகு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
காலஞ்சென்ற நம்பியாரின் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பாஜக தலைவர் இல. கணேசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் எஸ்.எஸ். ராஜேந்திரன், சிவகுமார், ரஜினிகாந்த், கமலஹாசன், ராதாரவி, நடிகைகள் மனோரமா, வைஜெயந்திமாலா, கே.ஆர். விஜயா உட்பட பலர், நம்பியாரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர்.
எம்.என். நம்பியாரின் உடல் இன்று மாலை சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|