யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சொத்து குவிப்பு வழக்கு: சேடப்பட்டி முத்தையா விடுதலை!
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008   ( 09:14 IST )
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், சட்டசபை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா, அவரது மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1991-96ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டசபை சபாநாயகராக இருந்தார் சேடப்பட்டி முத்தையா. அப்போது, அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.45 லட்சத்து 74 ஆயிரம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இவருக்கு பினாமியாக அவரது மனைவி சகுந்தலா, மகன்கள் அறிவழகன், மணிமாறன் மற்றும் மகள் மலர்விழி ஆகியோர் செயல்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, பின்னர் வந்த திமுக ஆட்சிக் காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. ழக்கை விசாரித்த சென்னை தனி நீதிமன்றம், சேடப்பட்டி முத்தையாவின் மனைவி சகுந்தலாவை விடுதலை செய்தது.

எனினும், சேடப்பட்டி முத்தையா, அவரது மகன்கள் ஆகியோருக்கு 25 மாத சிறைத் தண்டனையும், மகள் மலர்விழிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து கடந்த 2000ஆ‌ம் ஆ‌ண்டில் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், தனது வருமானத்திற்கான ஆதாரத்தை சேடப்பட்டி முத்தையா நிரூபித்துள்ளதாகவும், அவருக்கு பினாமிகளாக செயல்பட்டதாக மகன்கள் மற்றும் மகள் மீதான புகாருக்கு ஆதாரம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் கூறி, 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்து உத்தரவிட்டார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜெ.- பரதன் சந்திப்பு: கூ‌ட்ட‌ணி கு‌றி‌த்து பே‌ச்சுவா‌ர்‌த்தை!
ரா‌ஜப‌‌க்ச‌வி‌ன் கனவு ‌நிறைவேறாது: தா.பா‌ண்டிய‌ன்
'போரை ‌நிறு‌த்த கருணாநிதி நெருக்கடி கொடுக்கவில்லை'!
நடிகர் எம்.என். நம்பியார் மரணம்
கருணாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஜெ.
இலங்கை பிரச்னை: வைகோ உண்ணாவிரதம்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...