|
| ஜெ.- பரதன் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை! |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008 ( 08:55 IST ) | |
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஏ.பி.பரதன் சந்தித்துப் பேசினார்.
போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய துணைச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்புக்கு பின்னர் ஏ.பி.பரதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேசினோம். அதற்காகத்தான் ஜெயலலிதா எங்களை அழைத்திருந்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கான அறிகுறிதான் இந்த சந்திப்பு.
இந்த சந்திப்பு குறித்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு தெரிவிப்போம். மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கூட்டணி அமைப்பது குறித்து அவர்களும் விவாதிப்பார்கள். பின்னர் இரு கம்யூனிஸ்ட் கட்சியினரும் சேர்ந்து முடிவு எடுப்போம்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக இன்னமும் நீடிப்பதால், திமுகவுடன் நாங்கள் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|