|
| ராஜபக்சவின் கனவு நிறைவேறாது: தா.பாண்டியன் |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 17:07 IST ) | |
'உலகில் கடைசித் தமிழன் இருக்கும் வரை, இலங்கை தமிழர்களை அழிக்க நினைக்கும் அந்நாட்டு அதிபர் ராஜபக்சவின் கனவு நிறைவேறாது' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும், இதற்கு துணைபோகும் மத்திய அரசை கண்டித்தும் சென்னை சேப்பாக்கத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இதை தொடங்கிவைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசியதாவது:
இலங்கை பிரச்சனையில் ஒட்டுமொத்த தமிழர்களும் குரல் கொடுத்து வருகிறோம். ஆனாலும், இதற்கு மத்திய அரசு செவி சாய்க்காததால் தான் இலங்கை தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள கடைசி தமிழன் இருக்கும் வரை, இலங்கை தமிழர்களை அழிக்க நினைக்கும் ராஜபக்சவின் கனவு நிறைவேறாது.
வரும் 25ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்துக்கு பிறகும் போர் நிறுத்தப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் பற்றி அனைவரும் பேசி முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|