|
| 'போரை நிறுத்த கருணாநிதி நெருக்கடி கொடுக்கவில்லை'! |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 16:34 IST ) | |
"இலங்கையில் போரை நிறுத்தும்படி வலியுறுத்தி, மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி அரசியல் நெருக்கடி கொடுக்காததே, தற்போது போர் நீடிக்க காரணம்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் போரை உடனடியாக நிறுத்து வலியுறுத்தியும், அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு உதவுவதை கண்டித்தும் மதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:
இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வரை வந்து, போரை நிறுத்த முடியாது என்று கொக்கரித்துவிட்டு சென்றிருக்கிறார். இதற்கு மத்திய அரசே காரணம்.
தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்த பின்னரும், 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை.
மத்திய அரசு போரை நிறுத்த சொன்னால் இலங்கையில் போர் நிறுத்தப்படும். ஆனால் அதை செய்ய மத்திய அரசு தயங்குகிறது.
இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி அரசியல் நெருக்கடி கொடுக்காததால்தான் இந்த பிரச்சனை இன்னும் நீடித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|