யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நடிகர் எம்.என். நம்பியார் மரணம்
சென்னை (ஏஜென்சி), 19 நவம்பர் 2008   ( 14:20 IST )
பழம்பெரும் நடிகர் எம்.என். நம்பியார் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 89.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நம்பியார், வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்து வந்தார். அவரது உடல்நிலை இன்று காலை மிகவும் மோசமானது.

இந்நிலையில் பிற்பகல் 1.30 மணியளவில் நம்பியாரின் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக நம்பியாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

நம்பியாரின் மறைவு செய்தியைக் கேட்டு முக்கியப் பிரமுகர்களும்,சினிமா நடிகர்- நடிகைகளும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் வில்லன் நடிகர் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் நம்பியார். அவரது வில்லத்தனமான பார்வை, நமுட்டுச் சிரிப்பு, கனல் பறக்கும் வசனங்கள் என வில்லன் நடிப்பில் தனக்கென முத்திரை பதித்த நம்பியார், 1919 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி கேரள மாநிலம் மஞ்சேரியில் பிறந்தவர்.

தனது 13 ஆவது வயதில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த நம்பியார், சுமார் ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். 1935-ம் ஆண்டு வெளியான 'பக்த ராமதாஸ்' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

ஒவ்வொரு படங்களிலும் விதவிதமான வில்லத்தனங்களை அறிமுகப்படுத்திய பெருமையும் நம்பியாரையே சேரும்.

எனினும் திரையில் மட்டுமே வில்லானக் திகழ்ந்தார் நம்பியார். நிஜ வாழ்வில் அவர் அன்பையும் அமைதியையும் கடைபிடித்து வந்தார்.

ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவரான நம்பியார், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 65 ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்றிருக்கிறார்.

நம்பியாரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கருணாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஜெ.
இலங்கை பிரச்னை: வைகோ உண்ணாவிரதம்
தேமுதிக சார்பில் வேலைவாய்ப்பு முகாம்: விஜயகாந்த்
தமிழக மீனவர்கள் கைது ஏன் ? : இலங்கை விளக்கம்
குரு கைதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு: பாமக
சட்டக் கல்லூரி வன்முறை: 14 மாணவர்கள் கைது
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...