|
| கருணாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஜெ. |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 13:57 IST ) | |
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக அவதூறு புகார் தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்கும்படி கோரி, முதல்வர் கருணாநிதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால் ரூ. 1 கோடி கேட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் அந்த நோட்டீஸில் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், 'வன்முறையைத் தூண்டி விட்டதாக ஜெயலலிதா மீது தெரிவித்த அவதூறான குற்றச்சாட்டை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இதற்காக நிபந்தனையின்றி எழுத்து மூலமாக மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மன்னிப்புக் கேட்கத் தவறினால், அவதூறு குற்றச்சாட்டு தெரிவித்ததால் ஏற்பட்ட வேதனை, மன உளைச்சலுக்காக ரூ. 1 கோடி நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் கருணாநிதிக்கு எதிராக வழக்கு தொடர நேரிடும் என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் தேதி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் இடையே கடும் மோதல் வெடித்தது.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி கோவையில் பேட்டியளித்த முதல்வர் கருணாநிதி, 'என்னை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்காக இரு சாராரையும் இவர்களே (ஜெயலலிதா, வைகோ) தூண்டிவிட்டு சண்டைப் போடச் செய்திருக்கிறார்களோ என்று தெரிகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
கருணாநிதியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ஜெயலலிதா, அதற்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று கூறியிருந்தார்.
ஜெயலலிதாவின் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக நேற்று கருணாநிதி அறிவித்த நிலையில், தற்போது ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|