யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தேமுதிக சார்பில் வேலைவாய்ப்பு முகாம்: விஜயகாந்த்
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008   ( 12:46 IST )
தேமுதிகவின் 4ம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு வரும் 22ம் தேதி சேலத்திலும், 30ம் தேதி ஈரோட்டிலும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தேமுதிக 4ம் ஆண்டு தொடக்க நாளன்று 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தேன். இதை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் இருந்தும் வேலை வாய்ப்பு கோரி மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இது சம்பந்தமாக சில தொழில் நிறுவனங்களோடு பேசி வருகிறோம்.

முதல் கட்டமாக வரும் 22ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சேலம் காவல்துறை ஆணையாளர் அலுவலகம் அருகேயுள்ள விஜயராகவாச்சாரியார் மண்டபத்தில் வேலை வாய்ப்புக்கான நேர்காணல் நடைபெறும்.

வரும் 30ம் தேதி ஈரோட்டில் பிரப் ரோடு டெலிபோன் பவன் அருகேயுள்ள யாளி ஹோட்டலில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெறும்.

வேலை வாய்ப்பும் வேண்டும் பெண்கள், இளைஞர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் எவ்விதமான சிபாரிசுகளும் ஏற்றுக் கொள்ளப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழக மீனவர்கள் கைது ஏன் ? : இலங்கை விளக்கம்
குரு கைதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு: பாமக
சட்டக் கல்லூரி வன்முறை: 14 மாணவர்கள் கைது
மேட்டூர் நீர் மட்டம் தொடர்ந்து குறைகிறது
இலங்கை பிரச்சனையில் ஒன்றுபட்டு செயல்படுவோம்: திருமா
முத‌ல்வ‌ர் தலைமை‌யி‌ல் ஆலோசனை: ராமதா‌ஸ் கோரிக்கை
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...