|
| தமிழக மீனவர்கள் கைது ஏன் ? : இலங்கை விளக்கம் |
| கொழும்பு / புதுக்கோட்டை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 12:38 IST ) | |
தங்கள் கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்ததாலேயே தமிழக மீனவர்களை கைது செய்ததாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டணம் பகுதியை சேர்ந்த சுமார் ஆயிரம் மீனவர்கள் 252 விசைப்படகுகளில் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு, மீனவர்கள் தனித் தனி குழுக்களாக பிரிந்து நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென 5 படகுகளை சுற்றிவளைத்தனர்.
பின்னர், இலங்கை எல்லைக்குள் சென்று தமிழக மீனவர்கள் மீன்பிடித்ததாக கூறி 22 மீனவர்களை துப்பாக்கி முனையில் கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன் துறைமுக காவல் நிலையத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குட்பட்ட நாய்னா தீவுப் பகுதியில் மீன்பிடித்ததாலேயே அவர்களை கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படையினர் மட்டுமே செல்லக்கூடிய அந்த பகுதியில் அவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர்.
இலங்கை மீனவர்கள் பலர் இந்திய சிறைக்குள் இருப்பதால் அதற்கு பதில் நடவடிக்கையாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்பது தெரியாது.ஆனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|