|
| குரு கைதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு: பாமக |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 12:34 IST ) | |
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய பாமக முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
தேசிய பாதுகாப்புச் சட்டம் மிகவும் ஆபத்தானது. ஓர் அரங்கத்துக்குள் நடைபெற்ற கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியது தொடர்பாக, 6 மாதங்கள் கழித்து குரு மீது திமுக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
தோழமையாக இருந்தது வரையில் நடவடிக்கை எடுக்காமல், ஆளும் கட்சியுடனான உறவில் உரசல் என்றதும், மிகவும் காலம் தாழ்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என்ற வாதம் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்டது.
இதனை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்ட போதிலும், ஆட்சியில் இருப்பவர்களும், ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இயக்கி வைக்கிற செயல்பட்டுக் கொண்டிருக்கிற காவல் துறையினரும், இந்த கால தாமதத்துக்கு எடுத்துச் சொன்ன காரணங்கள் நியாயமானவைதானா? என்பதை அவர்களது மனசாட்சிக்கே விட்டுவிடுகிறோம்.
6 மாதங்களில் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். காவல்துறை அனுமதி பெற்று நடத்தப் பட்டிருக்கின்றன. காவல்துறையும் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கி இருக்கிறது. ஆனால், 6 மாதங்களாக அவர் தலைமறைவாக இருந்ததாக போலீசார் தெரிவித்த கருத்துக்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இது நியாயம்தானா? என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|