|
| சட்டக் கல்லூரி வன்முறை: 14 மாணவர்கள் கைது |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 12:33 IST ) | |
அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் முதல்வர் அறையை சூறையாடியது தொடர்பாக நேற்று நள்ளிரவில் 14 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த 12 ஆம் தேதி சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களின் இரு பிரிவினர் இடையே கடும் மோதல் வெடித்தது.
இச்சம்பவம் நடந்த மறுநாள் (13 ஆம் தேதி) சட்டக் கல்லூரியில் உள்ள முதல்வரின் அறையை மாணவர்கள் கும்பல் ஒன்று சூறையாடியது. அங்கிருந்த மேஜை, நாற்காலி, எழுது பொருட்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்றிரவு 14 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நகரின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட இவர்கள் மீது, அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாக இ.பி.கோ. 147, 148, 3(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் இவர்கள் அனைவரும் இன்று காலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சைதாப்பேட்டை, புழல் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|