யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மேட்டூர் நீர் மட்டம் தொடர்ந்து குறைகிறது
திருச்சிராப்பள்ளி (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008   ( 11:18 IST )
மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 73.780 அடியாக இருந்தது.

இது குறித்து பொதுப்பணித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

பருவ மழை இல்லாததாலும், பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.

அக்டோர்பர் 30 ஆம் தேதி 88.510 அடியாக நீர் மட்டம் இருந்தது. நேற்று காலை இது 74.460 அடியாகக் குறைந்தது. கடந்த இரு வாரங்களில் அணையின் நீர் மட்டம் 14 அடி குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 73.780 அடியாக இருந்தது. அணைக்கு 6,154 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு 15,998 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரியில் 7,657 கன அடியும், வெண்ணாற்றில் 1,510 கன அடியும், கல்லணைக் கால்வாயில் 2,513 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கை பிரச்சனையில் ஒன்றுபட்டு செயல்படுவோம்: திருமா
முத‌ல்வ‌ர் தலைமை‌யி‌ல் ஆலோசனை: ராமதா‌ஸ் கோரிக்கை
குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை: அரசு விளக்கம்
தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைப்பிடிப்பு!
நவ. 25ல் முழு அடைப்புக்கு பதிலாக மறியல்: இ.கம்யூ
மன்மோகனை இலங்கை அரசு மதிக்கவில்லை : பா.ஜனதா
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...