|
| இலங்கை பிரச்சனையில் ஒன்றுபட்டு செயல்படுவோம்: திருமா |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 10:23 IST ) | |
'இலங்கை இனப் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அணி சார்பில் நேற்று நடந்த பேரணியில் கலந்துக்கொண்டு அவர் பேசியதாவது: இலங்கை இனப் பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்து வரும் 25ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருப்பது இந்த நேரத்தில் பொருத்தமானது அல்ல.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் உணர்வுகள் நியாயமானது என்றாலும் முதல்வர் கருணாநிதி தலைமையில்தான் அதனை வலியுறுத்த வேண்டும்.
தேவைப்பட்டால், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தும்படி வலியுறுத்தலாம்.
அதோடு, தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தியையும் நேரில் சந்தித்து வலியுறுத்தலாம்.
இதேபோன்று இலங்கை இனப் பிரச்சினையில் அனைத்து கட்சியினரும் ஒற்றுமையுடனும் செயல்பட்டால் பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காணலாம். இவ்வாறு அவர் பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|