|
| முதல்வர் தலைமையில் ஆலோசனை: ராமதாஸ் கோரிக்கை |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 10:20 IST ) | |
'இலங்கைத் தமிழர் பிரச்சனையில் 'முதல்வர் கருணாநிதி தலைமையில் மீண்டும் ஓர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும்' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பின் சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. இதை முடித்து வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நாம் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தி வருகிறோம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணியைச் சந்தித்து போரை நிறுத்த தாங்கள் தயாராக இல்லை என்று இலங்கை அதிபர் கூறிவிட்டதாகத் தெரிவித்தார்.
112 கோடி மக்களின் பிரதிநிதியான பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் அதனை இலங்கை அரசு மதிக்கவில்லை. இலங்கையில் போரை நிறுத்த ராஜபக்ச அரசு மறுத்து விட்டது கடும் கண்டனத்துக்குரியது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய மாற்று வழி என்ன என்பது குறித்து சில செய்திகளைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம்.அதனை முதல்வர் பார்வைக்கு அனுப்புவோம்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் மட்டுமல்ல, எல்லா பிரச்சினையிலும் திருமாவளவனும், நானும் ஒன்றிணைந்து செயற்படுவோம். மற்ற கட்சிகளும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.
இலங்கைப் பிரச்சனையில் முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுதான் ஈழத்தமிழர்களுக்கு நன்மை பயக்கும். எனவே, முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|