|
| குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை: அரசு விளக்கம் |
| சென்னை (ஏஜென்சி), 19 நவம்பர் 2008 ( 10:05 IST ) | |
சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்த குற்றச்சாட்டை, தமிழக அரசு மறுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் மாதம் 10 ஆயிரம் லிட்டர் வரை குடிநீர் பயன்படுத்தும் வீடுகளுக்கு ஒவ்வொரு ஆயிரம் லிட்டருக்கும் ரூ. 2.50 பெறப்பட்டது.
10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் லிட்டர் பயன்படுத்தும் வீடுகளுக்கு 10 ரூபாயும், 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் லிட்டர் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 25 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.
இந்த கட்டண விகிதத்தை மாற்றி, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ. 15 வசூலிப்பது என 2007 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால், இது அதிகமாக இருப்பதாகப் புகார் வந்ததை அடுத்து பழையக் கட்டண முறையே பின்பற்றும்படி முதல்வர் கருணாநிதி கடந்த மே மாதம் உத்தரவிட்டார்.
எனவே தற்போது முந்தைய கட்டண முறை தான் பின்பற்றப்படுகிறது.குடிநீர் கட்டணம் புதியதாக உயர்த்தப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|