யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைப்பிடிப்பு!
புதுக்கோட்டை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008   ( 09:32 IST )
நடுக்கடலில் ‌மீ‌ன் ‌பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜகதா‌ப்ப‌ட்டணம் பகுதியை சேர்ந்த சுமார் ஆயிரம் மீனவர்கள் 252 விசைப்படகுகளில் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு, மீனவர்கள் தனித் தனி குழுக்களாக பிரிந்து நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென 5 படகுகளை சுற்றிவளைத்தனர்.

பின்னர், இலங்கை எல்லைக்குள் சென்று தமிழக மீனவர்கள் மீன்பிடித்ததாக கூறி 22 மீனவர்களை துப்பாக்கி முனையில் கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன் துறைமுக காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து. ஜெகதாப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌மீனவ‌ர்களை ‌விடுதலை‌ செ‌ய்ய‌ நடவடிக்கை எடுக்கக் கோ‌ரி, பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், த‌மிழக முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி ம‌ற்று‌ம் உயர் அ‌திகா‌ரிகளு‌க்கு ச‌ங்க‌த்‌தி‌ன் மூல‌ம் த‌ந்‌தி அனு‌ப்‌ப‌ப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதி மீனவர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நவ. 25ல் முழு அடைப்புக்கு பதிலாக மறியல்: இ.கம்யூ
மன்மோகனை இலங்கை அரசு மதிக்கவில்லை : பா.ஜனதா
உசிலம்பட்டி : மறியலில் ஈடுபட்ட 15 மாணவர்கள் ‌நீ‌‌க்க‌ம்
மின்வெட்டு: நவ.20ல் சேலத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்!
சட்டக் கல்லூரி மாணவர் மோதல்: மேலும் 4 பேர் கைது!
ஜெ. வழக்கை சந்திக்கத் தயார்: கருணாநிதி
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...