|
| நவ. 25ல் முழு அடைப்புக்கு பதிலாக மறியல்: இ.கம்யூ |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 09:03 IST ) | |
'இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த முழு அடைப்புக்கு பதிலாக, மறியல் போராட்டம் நடைபெறும்' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தா.பாண்டியன் அறிவித்துள்ளார்!
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 17ம் தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இலங்கையில் நடந்து வரும் போரை நிறுத்தக்கோரி, வரும் 25ம் தேதி தமிழகத்தில் முழு வேலை நிறுத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால், இலங்கை போரினால் இலங்கை தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி முழு அடைப்பு போராட்டத்தை மாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்தன.
தமிழக மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும் என்பதால், போராட்ட முறையை மாற்றி அமைக்க ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க முழு அடைப்பு போராட்டம் தவிர்க்கப்படுகிறது.
அதற்கு பதிலாக, வரும் 25-ம் தேதி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் முன்னர் மறியல் போராட்டம் நடைபெறும். அப்போது, 'இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்ற ஒரே கோரிக்கையை மட்டும் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்று மறியலில் ஈடுபடுவோர், இந்த கோரிக்கையை தவிர வேறு எந்த முழக்கத்தையும் எழுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கட்டுப்பாட்டுடனும், துக்கத்துடனும், இலங்கை தமிழ் மக்களை காப்பாற்றும் உயரிய பொறுப்புணர்வுடன் தமிழக மக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|