யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மாணவர் மோதலில் நியாயமான நடவடிக்கை தேவை: திருமா
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008   ( 16:54 IST )
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற கலவரம் தொடர்பாக நியாயமான நடவடிக்கை தேவை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று காவல்துறை ஆணையரை சந்தித்து பேசினார்.அப்போது, சட்டக் கல்லூரி மாணவர் மோதல் குறித்து பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக, இப்பிரச்சனையில் சம்பந்தமே இல்லாதவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்களுடைய பெற்றோர்களிடம் சென்று விசாரணை நடத்துகின்றனர். இது தொடர்பாக இன்று காவல்துறை ஆணையரை சந்தித்துப் பேசினோம்.

இந்த பிரச்சனையில் ஒருதலைபட்சமான நடவடிக்கை கூடாது. சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும்.

இந்த பிரச்சனை குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து விசாரித்தவர். அவருக்குப் பதிலாக தற்போது பணியில் உள்ள நீதிபதிகள் குழுவை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். இதனை தமிழக அரசுக்கு எங்களுடைய கோரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இரு பிரிவு மாணவர்களுக்கு இடையேயான மோதல் தொடர்பான காட்சிகளை மீண்டும் ஒளிபரப்புவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மதுரை கலவர‌த்தை ‌‌விசா‌ரி‌க்க ஆய்வு குழு : தங்கபாலு
நவ. 25ல் பந்த்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு!
திருவண்ணாமலைக்கு தீவிரவாதிகள் குறி?
சட்டக் கல்லூரி மோதல் : கருணாநிதி மீது ஜெ.வழக்கு
திமுக கூட்டணி குறித்து செயற்குழு முடிவு செய்யும்: ராமதாஸ்
உசிலம்பட்டி, சிவகாசியில் பஸ்கள் மீது தாக்குதல்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...