|
| நவ. 25ல் பந்த்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு! |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008 ( 16:13 IST ) | |
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழுஅடைப்பு நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பிரச்சனை குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மதிமுக, பாமக, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன.
இக்கூட்டத்துக்கு பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இலங்கையில் நடந்து வரும் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் ஒருவரி தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
இலங்கை போரை நிறுத்தும்படி இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும். அந்நாட்டு ராணுவத்துக்கு அளித்து வரும் ராணுவ உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
இதை வலியுறுத்தி அனைத்து கட்சிகளின் சார்பில் வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துக் கொள்ளாத முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து முழு அடைப்புக்கு ஆதரவு கேட்கவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|