யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திருவண்ணாமலைக்கு தீவிரவாதிகள் குறி?
திருவண்ணாமலை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008   ( 14:09 IST )
கார்த்திகை தீபத்த் திருவிழாவின் போது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோயிலில் நாசவேலைகளில் ஈடுபட சிலர் திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

நாட்டின் பிற மாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள், அப்போது திருவண்ணாமலையில் கூடி, கார்த்திகை தீபத்தை தரிசிப்பது வழக்கம்.

இவ்வாண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் போது கோயிலில் நாசவேலையில் ஈடுபட தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

காவல்துறையினர் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோயிலின் பெரிய கோபுரம் அருகே சந்தேகப்படும் படி சிலர் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர்.

அவர்களின் பேச்சு கார்த்திகை தீபம் பற்றியும், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளை தகர்ப்பது பற்றியும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

காவல்துறையினரைக் கண்டதும் அந்த கும்பல் தப்பி ஓடி தலைமறைவானது. அவர்களில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். அந்த நபரிடம் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில், அதை சீர்குலைக்க விஷமிகள் சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்ப்டுகிறது. இச்சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சட்டக் கல்லூரி மோதல் : கருணாநிதி மீது ஜெ.வழக்கு
திமுக கூட்டணி குறித்து செயற்குழு முடிவு செய்யும்: ராமதாஸ்
உசிலம்பட்டி, சிவகாசியில் பஸ்கள் மீது தாக்குதல்
சட்டக் கல்லூரி மோதல்: 15 மாணவர்கள் கைது
புதிய காற்றழுத்த மண்டலம்: இன்றும் மழை!
கரூரில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்!
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...