|
| சட்டக் கல்லூரி மோதல் : கருணாநிதி மீது ஜெ.வழக்கு |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008 ( 13:35 IST ) | |
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக தன் மீது வீண் பழி சுமத்திய கருணாநிதி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்காக சட்டக் கல்லூரி மாணவர்களின் இரு சாராரை தூண்டி விட்டு சண்டை போடச் செய்திருப்பதாகக் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 12.11.2008 அன்று காவல்துறையினர் முன்னிலையில் இரு பிரிவினர் மோதிக் கொண்டதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
காவல்துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததை இங்குள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என அனைவரும் கண்டித்துள்ளனர்.
காவல்துறையின் மெத்தனத்துக்கு என்ன காரணம்? கல்லூரி முதல்வர் எங்கே தவறியிருக்கிறார்? இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? மாணவர்கள் மத்தியில் உள்ள புகைச்சலுக்கு என்ன காரணம்? என்பதை விசாரிக்க முன்னாள் நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றமும் காவல்துறைக்கு தகுந்த உத்தரவிட்டுள்ளது. இச்சூழ்நிலையில் ஒரு முதலமைச்சர் பத்திரிக்கையாளர்களுக்கு இவ்வாறு பேட்டி அளிக்கலாமா?
இதன் மூலம் நீதி விசாரணையின் முடிவு இப்படித் தான் இருக்க வேண்டும் என்று நீதிபதிக்கு கருணாநிதி அறிவுறுத்துகிறாரோ என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த பேட்டி நீதிமன்றத்தையும், புலனாய்வு அமைப்புகளையும் மிரட்டுவதுடன், வழக்கை திசை திருப்புவதாகவும் அமைந்துள்ளது.
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் விவகாரத்தில் என் மீது தேவையில்லாமல் வீண் பழி சுமத்தும் வகையில் பேட்டியளித்த கருணாநிதி மீது அவதூறு வழக்கு தொடருவேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|