|
| திமுக கூட்டணி குறித்து செயற்குழு முடிவு செய்யும்: ராமதாஸ் |
| வேலூர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008 ( 12:18 IST ) | |
திமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வேலூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை, இந்திய வந்த இலங்கை அதிபர் ராஜபக்ச நிராகரித்து விட்டார். அவர் இலங்கை திரும்பியதும் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இலங்கைப் பிரச்சனையில் குறைந்தபட்சம், மனிதாபிமான அடிப்படையில் இலங்கை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திக்கு கொண்டு சென்று, அதன் தலையீட்டை கோர வேண்டும். இல்லையெனில் இந்த பிரச்சனை தீர வாய்ப்பில்லை.
இலங்கைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும். இதுதொடர்பாக மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு அரசை எச்சரிக்க வேண்டும்.
இலங்கை பிரச்சனை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ம.க. பங்கேற்கும். இந்த பிரச்சனை தொடர்பாக, மாநில அரசு தான் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். என மீண்டும் ஒருமுறை அனைத்து கட்சி கூட்டம் நடத்தலாம்.
தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் செயற்குழு, மற்றும் பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|