யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
உசிலம்பட்டி, சிவகாசியில் பஸ்கள் மீது தாக்குதல்
விருதுநகர்/ மதுரை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008   ( 11:57 IST )
சிவகாசி மற்றும் உசிலம்பட்டியில் நடந்த கல்வீச்சு சம்பவங்களில் 5 பேருந்துகள் சேதமடைந்தன. இதில் பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

உசிலம்பட்டி அருகே நள்ளிரவு நேரத்தில் 4 பேருந்துகள் கல் வீசித் தாக்கப்பட்டன.பேரையூர், மாதரை, வத்தலகுண்டு மற்றும் செக்காரூரணி ஆகிய இடங்களுக்குச் சென்று 4 பேருந்துகள் இதில் சேதமடைந்தன.

இதையொட்டி உசிலம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சில இடங்களில் பேருந்து சேவைகள் இரவில் ரத்து செய்யப்பட்டன.

இதேபோல், சிவகாசியில் இருந்து சங்கரன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றின் மீது விஷமிகள் சிலர் கற்களை வீசினர். இதில் பேருந்தின் முன்புறக் கண்ணாடி சேதமடைந்தது.

மற்றொரு சம்பவத்தில் நேற்று மாலை திருத்தங்கல் சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தும் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இச்சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சட்டக் கல்லூரி மோதல்: 15 மாணவர்கள் கைது
புதிய காற்றழுத்த மண்டலம்: இன்றும் மழை!
கரூரில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்!
ராஜபக்ச சவால் இந்தியாவுக்கே அவமானம் : வைகோ
ஜாதி சண்டையை தூண்டிவிடக்கூடாது: முதல்வர் கண்டனம்
விலைவாசி: தேமுதிக மகளிரணி ஆர்ப்பாட்டம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...