யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சட்டக் கல்லூரி மோதல்: 15 மாணவர்கள் கைது
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008   ( 11:45 IST )
சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில், கடந்த 12ம் தேதி இரு தரப்பு மாணவர்கள் மோதிக் கொண்டதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். புதிய கமிஷனராக பொறுப்பேற்ற ராதாகிருஷ்ணன், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி, 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், மதுரையைச் சேர்ந்த சிவகதிரவன், தஞ்சாவூரைச் சேர்ந்த பிரேம்நாத், குறிஞ்சிப் பாடியைச் சேர்ந்த ராஜா ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், அண்ணாநகர் பாடிகுப்பத்தைச் சேர்ந்த இளம்முகில் ஆகியோர் நேற்று காலை கைது செய்யப்பட்டனர்.

மதுராந்தகத்தைச் சேர்ந்த பிரேம்குமார், உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த இளையராஜா ஆகியோர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, இதுவரை 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புதிய காற்றழுத்த மண்டலம்: இன்றும் மழை!
கரூரில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்!
ராஜபக்ச சவால் இந்தியாவுக்கே அவமானம் : வைகோ
ஜாதி சண்டையை தூண்டிவிடக்கூடாது: முதல்வர் கண்டனம்
விலைவாசி: தேமுதிக மகளிரணி ஆர்ப்பாட்டம்
சேலம்: என்கவுன்டரில் ரவுடி சுட்டுக் கொலை
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...